தமிழ்நாட்டில் தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் காலியாக உள்ள கிளார்க் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் பெயர்: Clerk
கல்வித்தகுதி: கலை மற்றும் அறிவியல்/பொறியியல் பிரிவில் ஏதாவதொரு பட்டப்படிப்புடன் தேவையான கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். கலை மற்றும் அறிவியல் பாட பட்டதாரிகள் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். முறையான கல்வித் திட்டத்தின் கீழ் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 30.09.2011 தேதிப்படி பட்டதாரிகள் 24 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பில் SC/ST/PH பிரிவினருக்கு 5 வருடமும், BC/MBC பிரிவினருக்கு 2 வருடமும் சலுகைகள் அளிக்கப்படும்.
சம்பளம்: ரூ.7,200 - 20,200.
தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெறும். பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது மாதம் ரூ.13,200 உதவித்தொகை வழங்கப்படும்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள்: சென்னை, சேலம், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி.
விணணப்பக்கட்டணம்: ரூ. 200. SC/ST பிரிவினருக்கு ரூ.100. இதனை ''Tamilnadu Mercantile Bank Limited'' என்ற பெயரில் தூத்துக்குடியில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டி.டி.யாக செலுத்த வேண்டும். டி.டி.யின் பின்புறம் வரிசை எண், தங்களின் முழு பெயரைக் குறிப்பிடவும்.
விண்ணப்பிக்கும் முறை: www.tmb.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.11.2011.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின் அதன் பிரிண்ட் அவுட்டை டவுண்லோடு செய்து தேவையான இடத்தில் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை ஒட்டி அதனுடன் கல்வித்தகுதி, வயது, ஜாதி, உடல் ஊனம் போன்ற தேவையான சான்றிதழ்களையும் அட்டெஸ்ட் பெற்ற நகல்களை அனுப்ப வேண்டும். விண்ணப்ப உறையின் மீது ''Application for Recruitment of Clerks-2011'' என்று குறிப்பிடவும்.