ரஜினிகாந்த், ஆமிர்கான் இருவரும் இணைந்து ஊட்டச்சத்தின் அவசியத்தை விளக்கும் விளம்பரத் திரைப்படத்தில் நடிக்கின்றனர். இதை அரசு தயாரிக்கிறது.
ஏழைகளும் கிராமங்களில் வசிக்கும் எழுத்தறிவில்லா மக்களும் எளிதில் புரிந்துகொண்டு தங்களுடைய குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவை வழங்க இந்தத் திரைப்படம் உதவும்.
அனைத்து திரையரங்குகளிலும் தொலைக்காட்சி சேனல்களிலும் திரையிடப்படும். நாடு முழுக்க டிஜிடல் பேனர்களும் வைக்கப்படும்.
ஊட்டச்சத்து குறைவால் குழந்தைகள் உயிரிழக்க நேருவதுடன் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது, உடல் ஊனம் போன்றவையும் ஏற்படுகிறது. இவற்றைத் தடுக்க சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டிருந்தாலும் மக்கள் அவற்றை நாடுவதற்கு அவர்களுடைய மனம் கவர்ந்த "சூப்பர்-ஸ்டார்கள்' பங்களிப்பு அவசியம் என்று அரசு கருதுகிறது.
இதை அவ்விரு நட்சத்திரங்களிடமும் தெரிவித்தபோது அவர்கள் மனமுவந்து நடிக்க ஒப்புக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.