Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday 16 September 2012

கணவனிடமிருந்து மனைவி விகாரத்து பெறும் போது

கணவனிடமிருந்து மனைவி விகாரத்து பெறும் போது அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும் கணவன். விவாகரத்து பெற்ற பின்பும் கூட மாஜி மனைவிக்கு மெயின்டென்ஸ் என்ற பெயரில் பணம் கொடுத்து அழவேண்டும். ஆனால் மனைவிக்கு மட்டுமே எந்த பொறுப்பும் கிடையாது.

இந்திய ஜனத் தொகையில் 40 சதவீதம குழந்தைகள் ஆனால், குழந்தைகளின் நலத்தை கவனிக்க ஒரு தனி அமைச்சகம் கிடையாது. குழந்தைகள் என்றாலே, பெண்கள்தான் அவர்களின் பராமரிப்பாளர்கள் என்று கூறி விடுகிறார்கள்.

தந்தைகளின் உரிமைகளைப் பற்றியோ, அந்த தந்தையின் அரவணைப்பு, குழந்தைகளுக்கு கட்டாயம் தேவை என்பதை பற்றியோ இந்த சமுதாயமும், சட்டங்கள் இயற்றுபவர்களும் சிந்திப்பதிலை.

பெண்களின், தேவைகளும் குழந்தைகளின் தேவைகளும் ஒன்றல்ல. விவாகரத்து பெற்ற பெண் மறுமணம் செய்து கொள்வது அந்தப் பெண்ணின் நோக்கில் சரியாக இருக்கலாம். ஆனால் அது அந்தக் குழந்தைக்கு நன்மை விளைவிக்கக் கூடியதா என்பதை எண்ணிபார்ப்பதில்லை. ஆனால் தம்பதியர்கள் பிரியும் போது குழந்தைகளை பெரும்பாலும் பிரிந்து சென்ற மனைவியின் வசம்தான் நீதிபதிகள் ஒப்படைக்கிறார்கள்.

ஆக ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு அளிக்கும் பங்களிப்பை தாய் ஈடு செய்ய முடியாது. ஒரு குழந்தையின் வளர்ச்சியில் தந்தையின் பங்கு கணிசமானது. அது இந்தக் குழந்தைகளுக்கு மறுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை.