Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday 16 September 2012

பெண்களுக்கு பொறுமை ஒரு உன்னத பெருமை என்றால் தாய்மை

பெண்களுக்கு பொறுமை ஒரு உன்னத பெருமை என்றால் தாய்மை என்பது ஒப்பற்ற பாக்கியம். ஆனால் தற்போது அந்தத் தாய்மை பல கோணங்களில் குந்தகப்படுத்தப்படுகிறது. மருத்துவமனைகளில் பிறந்த குழந்தையை தாய்க்கே தெரியாமல் திருடிச் செல்வது எவ்வளவு பெரிய குற்றம். எத்தகைய துரோகம்?

இது ஒரு பக்கம் என்றால் பத்து மாதங்கள் சுமந்து பெற்று உயிரும் சதையுமாக வளர்த்த பிள்ளைகளைப் பணத்துக்காக விற்பது மிகப்பெரிய கொடுமை. ஆந்திராயில் பத்திரத்தில் ஒப்பந்தம் எழுதி ஆண் குழந்தையை குழந்தைப்பேறு இல்லாத தம்பதிக்கு ரூ 30 ஆயிரத்துக்கு விற்றார் ஒரு பெண்.

இது போன்ற குழந்தை விற்பனை சம்பவங்கள் அடிக்கடி நடக்கின்றன. இதற்கெல்லாம் வறுமையைக் காரணமாக சொன்னாலும் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டிய தடுக்கப்பட வேண்டிய செயல். இவைகளுக்கு நடுவே இன்னொரு அநியாயம். திருமணத்திக்கு முன்பே தப்புத்தண்டா செய்வது-கர்ப்பமாவது- கருவைக் கலைப்பது.

இப்போது பல விதமான கருத்தடுப்பு முறைகள் இருக்கின்றன. அவற்றை கடைப்பிடிக்காமல் கர்ப்பத்தை பாதியில் கலைக்கின்றனர். இது குற்றம் என்று சட்டம் சொன்னாலும் பலர் சந்தடியில்லாமல் அதை செய்கின்றனர்.

இதற்கு பல மருத்துவர்களும் துணை போகிறார்கள் - அதுவும் பெண் மருத்துவர்கள். தாய்மை என்பது உலகில் உயர்ந்தது. அதை பெண்களே தரம் தாழ்த்துவது வருத்தத்துக்குரியது.