பெண்கள் படிக்கும் பருவத்தில் பாய்ஃபிரண்ட் அவசியமா என ஒருமுறைக்கு இருமுறை யோசிக்க வேண்டும். பிற தோழிகளுக்கு பாய் ஃப்ரண்ட் இருப்பதைப் பார்த்து நீங்களும் பாய் ஃபிரண்ட் வைத்துக் கொள்வது அவசியம் என்று எண்ண வேண்டாம். உங்களின் நல்ல தோழிகள் உங்களுக்குப் பல பாய் ஃபிரண்டுகளை அறிமுகப்படுத்தி வைக்கலாம்.
ஆனால் அவர்களை உங்களுக்கு பிடிக்கவில்லை எனில் நோ சொல்லிவிடுங்கள். உங்கள் ஆண் நண்பரிடம் என்னென்ன குணங்களை நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று ஒரு லிஸ்ட் தயாரிக்கவும்.
உங்கள் லிஸ்ட் மிக நீண்டதாகவோ அல்லது மிகவும் உயர்ந்த லட்சியங்களைக் கொண்டதாகவோ இருந்தால் உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ற ஆண் நண்பன் கிடைப்பான் என்பதை மறந்துவிடுங்கள்.
உங்களிடம் நண்பனாக இருப்பதை விரும்பாத யாரையும் வலிய சென்று பாய் ஃபிரண்டாக்கிக் கொள்ளாதீர்கள். இல்லையென்றால் உங்களுக்கு அந்த நட்பினால் வீண் பிரச்சனைகள்தான் ஏற்படும்.