ஜெயா டி.வி.யின் 14ம் ஆண்டுத் துவக்க விழா மற்றும் மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் - ராமமூர்த்தி ஆகியோருக்கு பாராட்டு வழங்கும் விழா 29.08.2012 அன்று நடந்தது. இதில் ஜெயலலிதா கலந்து கொண்டார். இந்த விழாவில் ரஜினி, கமல், பாலசந்தர், இளையராஜா மற்றும் பல திரை உலக பிரமூகர்கள் கலந்துகொண்டனர்.
ரஜினியும் கமலும் அவங்களாகவே தான் இந்த ஃபங்ஷனுக்கு வந்தாங்களாம். சி.எம். கலந்துக்குற விழா என்றுகூட விழா ஏற்பாட்டாளர்கள் சொல்லலையாம். நாங்க வந்தே தீருவோம்னு அடம்பிடிச்சி அத்தனை பேரும் வந்து ஃபங்ஷனில் கலந்துக்கிட்டு ஜெயலலிதாவை வாழ்த்தினாங்களாம். (சரி... நம்புவோம்)
விழாவின் ஹைலைட்டாக அமைந்தது ரஜினியின் பேச்சு தான். ரஜினி பேசும் போது, வடக்கில் பார்த்தீங்கன்னா... சினிமாவில வி.சாந்தாராம், தாதா சாகேப் பால்கே, எஸ்.டி.பரமன், நம்ம தமிழ்நாட்டுல பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித் தலைவர்
எம்.ஜி.ஆர்., சிவாஜி சார், கண்ணதாசன்... இவங்க எல்லாரும் மறைந்தாலும் அவர்கள் பெயரும் புகழும் மறையவில்லை. இன்னும் அவர்கள் நம்மோடு வாழ்ந்துக்கிட்டிருக்காங்க.
இன்று அரசியலில் என்னுடைய ஆருயிர் நண்பர் மதிப்பிற்குரிய டாக்டர் கலைஞர் அவர்கள், புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்கள், விஸ்வநாதன், ராமமூர்த்தி... இவங்களுக்கெல்லாம் வெற்றி தோல்வி போன்றவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இவங்களைப் பொறுத்தவரை வெற்றியடைஞ்சா சந்தோஷம் இருக்கும்.
தோல்வியடைஞ்சா மனசு கொஞ்சம் வருத்தப்படும். ஆனா அவங்க பேருக்கும் புகழுக்கும் எந்த பாதிப்பும் வராது. ஏன்னா... அதையெல்லாம் தாண்டிய நிலையில் இருப்பவர்கள் இவர்கள். வெற்றி, தோல்விகளை தாங்கிக்கொள்ளும் சமமான மனநிலையில இருப்பாங்க.
கலைஞர் விழாவாலும் சரி, ஜெயலலிதா விழாவானலும் சரி, ரஜினியின் பேச்சு தான் விழாவில் பரபரப்பாக அமையும். அந்த வகையில் ரஜினியின் பேச்சு ஜெயலலிதாவை அப்செட் ஆக்கியிருக்கிறது. விழாவில் பேசிய ரஜினி கலைஞர் பெயரை குறிப்பிட்டதுதான் அதன் காரணமாம்.