ஜார்க்கண்ட் மாநில கூரியர் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு வாலிபரிடம் இருந்து சுமார் 600 டெட்டனேட்டர் மற்றும் 240 ஜெலட்டின் குச்சிகள் கைப்பற்றப்பட்டன. இந்த வெடிபொருட்களை டெலிவரி செய்ய சென்றபோது போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக அந்த வாலிபரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், கூரியர் நிறுவனம் வழக்கமாக இரண்டு அல்லது மூன்று வாடிக்கையாளர்களுக்கு வெடி பொருட்களை சப்ளை செய்து வந்தது தெரியவந்தது. இந்த டெட்டனேட்டர்கள் டால்பூரைச் சேர்ந்த நிறுவனத்திலும், ஜெலட்டின் குச்சிகள் நாக்பூரைச் சேர்ந்த நிறுவனத்திலும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த வெடிபொருட்கள் எங்கிருந்து வந்தன என்பது பற்றி தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரெண்டு மயூர் படேல் தெரிவித்தார்.