பெண்களுக்கு சில அபூர்வ குணங்கள் உண்டு. அவர்களின் மனதின் ஆழத்தை யாரும் அளந்து விட முடியாது. பெண்களின் குணநலன்கள் பற்றி ஆராய்ந்த இங்கிலாந்து பெண் ஆய்வாளர்கள் மேரிகோல்டு வெளியிட்ட ரகசியங்கள் இவை.. பெண்கள் தங்கள் கணவரிடம் தினமும் குறைந்தபட்சம் 3 பொய்களை சொல்கிறார்கள்.
பொய் சொல்லாத பெண்கள் ஒருவர் கூட இல்லை. பெரும்பாலான பெண்கள் 3 விதமான பொய் சொல்வார்கள். சிறு விஷயங்களில் தவறு நடந்து விட்டால் கூட உண்மையைச் சொல்லாமல் பொண்க் காரணம் கூறுவது அநேகப் பெண்களின் வாடிக்கை. இவர்கள் ஒரு வகை. கணவர் மீதான பயம் அல்லது வெறுப்பு காரணமாக உண்மையை மறைப்பது இரண்டாவது ரகம்.
வஞ்சகமாசப் பொய் சொல்வது மூன்றாவது வகை. சாதாரண சிராய்ப்பு காயம் ஏற்பட்டால் கூட அதன் உண்மையாக காரணத்தை சொல்ல மாட்டார்கள். சின்னக் சின்னக் காரியங்களில் அதிகம் பொய் சொல்லும் பெண்கள் அதை ஒரு தவறாக எடுத்துக்கொள்வதோ, ஏமாற்றுகிறோமே என்று கவலைப்படுவதோ கிடையாது.
இவ்வாறு சிறு சிறு விஷயங்களுக்கு கூட பொய்களை கூறும் பெண்கள் அதனால் பின்னால் ஏற்படும் பிரச்சனைகளைப்பற்றி கவலைப்படுவதில்லை. அவ்வாறு பிரச்சனை ஏற்படும் போது அதனால் கணவரின் அன்பை இழப்பதும் மட்டுமில்லாமல் குடும்பத்தில் நிம்மதியும் போய்விடுகிறது.
எனவே பெண்களே பொய் சொல்வது தவறில்லை. ஆனால் அவ்வாறு கூறும் பொய்கள் உங்களை சேர்ந்தவர்களையும், குடும்பத்தையும் பாதிக்காத வகையில் பார்த்துக்கொள்வது நல்லது.