Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 15 September 2012

அதிர்ச்சியில் இருக்கிறார் ஆபாச காட்சியில் நடித்த நடிகை

களவாணி பட நாயகனான விமல், அதன்பிறகு அதே சற்குணத்தின் இயக்கத்தில் வாகை சூடவா படத்தின் மூலம் நல்ல நடிகர் என்றொரு அங்கீகாரத்தை பெற்றார். என்றாலும், தொடர்ந்து அவருக்கு கிடைத்த படங்களால் அந்த பெயரை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதனால் அடுத்த கட்டத்துக்கு செல்ல முடியாமல் இன்னும் மினிமம் கியாரண்டி நடிகராகவே இருக்கிறார் விமல்.

இந்தநிலையில், தற்போது நடித்து வரும் கூத்து என்ற படத்தில், வெளுத்துக்கட்டு அருந்ததியுடன் இணைந்து படு ஆபாசமான காட்சிகளிலும் நடித்திருக்கிறார் விமல். அருந்ததியுடன் கூடி குலாவும் அந்த ஆபாச காட்சிகளை யு-டியூப்பிலும் வெளியிட்டு விட்டனர். இதனால் விமல் பெரியதாக அலட்டிக்கொள்ளவில்லை என்றபோதும், சம்பந்தப்பட்ட நடிகையான அருந்ததிதான் ஆடிப்போயிருக்கிறார். தற்போது வி.சேகர் இயக்கும் சரவணபவன் படத்தில் பக்கா குடும்ப நடிகையாக நடித்து வருவதால், இந்த கூத்து படம் தனது இமேஜை கூறுபோட்டு விடுமோ என்ற அதிர்ச்சியில் இருக்கிறார் நடிகை.