தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்கள். அரசு மருத்துவமனையில், போக்குவரத்து அலுவர்கள் முன்னிலையில் கண் பரிசோதனை செய்து சான்று பெற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளி, கல்லூரி வாகனங்களை ஓட்டும் ஓட்டுனர்கள் கண் மற்றும் உடல்நிலை குறித்து, அரசு மருத்துவமனைகளில் சரியான முறையில் பரிசோதனை செய்து சான்று பெற வேண்டும். ஏதேனும் பாதிப்பு இருப்பின் அவர்களை கண்டிப்பாக வாகன்ம் ஓட்டும் பணியில் அமர்த்தக் கூடாது என புது நிபந்தனை விதித்துள்ளது.
குறைந்தபட்சம் 10 ஆண்டு பணி அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும் மேலும் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவன அடையாள அட்டை அணிந்தும், மிதமான வேகத்தில் வாகனங்களை இயக்க தெரிந்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.