Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Sunday, 16 September 2012

பவர் ஸ்டார் மீது துறையூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு


கடன் வாங்கித் தருவதாக கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்த வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை சென்னையில் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த வரதராஜன் என்பவரிடம் ரூ.12 கோடி கடன் பெற்று தருவதாக கூறி ரூ.60 லட்சத்தை சீனிவாசன் பெற்றார். ஆனால் அவர் கடன் வாங்கித்தரவில்லை. பணத்தை திருப்பித் தருமாறு அவரிடம் வரதராஜன் கேட்டார். நடிகர் சீனிவாசன், வரதராஜனுக்கு ரூ.30 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தார். அது வங்கியில் இருந்து பவுன்ஸ் ஆகிவிட்டது. இதுகுறித்து நேற்று சீனிவாசன் மீது துறையூர் குற்றவியல் நீதிமன்றத்தில் வரதராஜன் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி எழில்வேலவன், வரும் 21ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.