Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Friday, 7 September 2012

210 கோடிகளை உலகம் முழுவதும் அள்ளி உள்ளது சல்மான் கானின் ஏக் தா டைகர்

வெளியாகி இதுவரை 210 கோடிகளை உலகம் முழுவதும் அள்ளி உள்ளது சல்மான் கானின் ஏக் தா டைகர் படம். இதுவரை வந்த ஹிந்தி படங்களில் இந்தியாவில் அதிகம் வசூலித்த படங்களில் இரண்டாவது இடத்தை (175 கோடி) 12 நாட்களில் பிடித்துள்ளது இந்தப் படம். முதலாவது இடத்தை அமீர் கானின் படமான த்ரீ இடியட்ஸ் (202 கோடி) இன்றுவரை தக்க வைத்துள்ளது. மூன்றாவது இடத்தில் இருப்பதும் சல்மான கானின் படமான பாடி கார்ட் (148 கோடி) என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வேகத்தில் ஏக் தா டைகர் படம் இன்னும் ஒரு வாரம் வசூலித்தால் அமீர் கானின் சாதனையை சல்மான் கான் உடைக்கலாம் என பாக்ஸ் ஆபீஸ் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.