நடிகர் விஜய் நடித்துக்கொண்டிருந்த துப்பாக்கி படத்தின் மீது போடப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதிகள், படத்தின் மீதான தடையை செப்டம்பர் 10-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார்கள். இந்நிலையில் விஜய் அடுத்ததாக நடிக்கவிருந்த கவுதம் மேனனின் படமும் கைவிடப்பட்டுவிட்டது.
விஜய் அடுத்ததாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிப்பார் என பேசப்பட்டு வந்த நிலையில் இந்தி பட ரீமேக்கில் நடிக்கிறார் என்ற செய்தி கோலிவுட் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த போக்கிரி படத்தை தமிழில் ரீமேக் செய்து பிரபுதேவா இயக்கிய போது அந்த படத்தில் விஜய் நடித்தார்.
போக்கிரி படம் தமிழில் மாபெரும் வெற்றியடைந்தது. ஆனால் இதே படத்தை இந்தியில் ரீமேக் செய்து சல்மான்கான் நடித்த “WANTED" தோல்வியடைந்தது. இப்போது சல்மான் நடிப்பில் வெளிவந்திருக்கும் “ஏக் தா டைகர்” படத்தின் ரீமேக்கில் விஜய் நடிப்பார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.
ஏக் தா டைகர் படம் 10 நாட்களில் வசூல் சாதனை புரிந்துள்ளதால் இந்த செய்தி கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.