Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Monday, 27 August 2012

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால்????

கடலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மக்களுக்கான மக்கள் பணி என்ற தலைப்பில் ஏழை பெண் களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடைபெற்றது.

தே.மு.தி.க. நிறுவன தலைவரும், சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டு ஏழை பெண்களுக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.



இவ்விழாவில் விஜயகாந்த் பேசியபோது, ‘’கடலூர் மக்களை சுனாமியும் தாக்கியது, தானே புயலும் தாக்கியது. புயல் தாக்கியபோது நான் வந்தேன்.

தானே புயல் பாதிப்புகள் குறித்து எங்கள் கட்சி எம்.எல். ஏ.க்கள் சட்டமன்றத்தில் பேசியபோது அவர் களுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டது. மீண்டும் பேச முற்பட்டபோது அத்தாட்சி ஏதும் உள்ளதா? என கேட்டார்கள்.

கடந்த ஆண்டு ஜுன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும் வந்து விட்டது.

மேட்டூரில் இருந்து தண்ணீர் வரவில்லை. இதனால் காவிரி டெல்டா பாசன விவசாயிகள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். முதலில் விவசாயிகளையும், அவர்களின் குடும்பத்தையும் காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள். பாகுபாடு இன்றி அவர்களுக்கு உதவிகளை செய்ய வேண்டும்.

தே.மு.தி.க. ஆட்சிக்கு வந்தால் ரேஷன் அரிசி உங்கள் வீடு தேடிவரும். படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வேலை கொடுப்போம். அ.தி.மு.க. இல்லை என்றால் தே.மு.தி.க. இல்லை என்கிறார்கள். நான் சொல்கிறேன். தே.மு.தி.க. இல்லை என்றால் அ.தி.மு.க. தேர்தலில் வெற்றி பெற்று இருக்க முடியாது. 2014-ல் பாராளுமன்ற தேர்தல் வருகிறது. தொண்டர்கள் உதவியுடன் என்ன செய்கிறேன் பாருங்கள்.

கரும்பு டன் ஒன்றுக்கு ரூ.2,500 தருவதாக சொல்லி ஓட்டுகளை வாங்கினீர்கள். ஆனால் ரூ.2 ஆயிரத்து 100 கூட கொடுக்கவில்லை. கரும்பு கழிவுகளுக்கும் குறைந்த விலை கொடுப்பதால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

18 ஆயிரம் கோடியாக இருந்த டாஸ்மாக் வருமானத்தை 22 ஆயிரம் கோடி ரூபாயாக மாற்றினார்கள். இதுதான் இந்த ஆட்சியின் சாதனை. எங்கும் லஞ்சம், எதிலும் லஞ்சம், விஜயகாந்த் உண்மையை பகிரங்கமாக செல்வேன். விஜயகாந்த் யாருக்கும் அஞ்சமாட்டான்.

புதுக்கோட்டையில் 32 மந்திரிகளும் காசு கொடுத்தார்கள். விஜயகாந்த் கட்சிக்கு டெபாசிட் கிடைக்கக்கூடாது என்றார்கள். என்ன ஆனது? விஜயகாந்த் கட்சி பத்தோடு, பதினொன்னு என்றார்கள், இப்போது என்ன அனது?

மத்திய அரசு பெட்ரோல் விலையை, சர்வதேச சந்தையில் உள்ள கச்சா எண்ணையின் விலையின் அடிப்படையில் நிர்ணயிக்கிறது.

ஆனால் உலக சந்தையில் சிமெண்டு மூட்டை ரூ.160-க்கு விற்கும்போது இங்கு மட்டும் ஏன் சிமெண்டு மூட்டை ரூ.350-க்கு விற்கிறது. தானே புயலில் கொள்ளையடித்தீர்கள், உங்களை யாரும் பார்த்துக் கொண்டு இருக்கவில்லை என்று கருதாதீர்கள்.

உங்களை மேலே இருந்து தெய்வம் பார்த்துக்கொண்டு இருக்கிறது. அதனால்தான் அந்த தெய்வத்தோடும், மக்களோடும் நாங்கள் கூட்டணி வைத்திருக்கிறோம்’’ என்று தெரிவித்தார்.