Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 25 August 2012

இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்திலும் நடிக்கிறார்

நகைச்சுவை நடிகர் சந்தானம் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்தவர். தனது டைமிங் காமெடிகளால் துரிதமாக உயர்ந்த இடத்தை பிடித்தார். வாய்ப்புக்காக அவர் காத்திருந்தது போக, அவருக்காக வாய்ப்பு தினம் அவர் வீட்டில் காத்திருக்கிறது என்பது தான் கோடம்பாக்கத்து
தகவல்.


டஸன் படத்தை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படத்திலும் நடித்து வரும் சந்தானம் இயக்குனர் ஷங்கரின் ‘ஐ’ படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் ஐ படத்தின் ஷூட்டிங் சென்னையில் நடந்தது. சந்தானம் நடிக்க வேண்டிய காட்சிகளையும் தயார் செய்துவிட்டு சந்தானத்திற்காக காத்திருந்திருக்கிறார் ஷங்கர்.

சந்தானம் நடிக்க வேண்டிய காட்சிகளுக்காக மற்ற காட்சிகளையும் நிறுத்தி வைத்ததால் ஏமாற்றமடைந்திருக்கிறார் ஷங்கர். சிறிது நேரம் கழித்து ஷங்கருக்கு ஃபோன் செய்த சந்தானம் “இங்க ஒரு ஷூட்டிங்க்ல மாட்டிக்கிட்டேன் வர முடியலண்ணே” என்று கூறினாராம். இந்த காட்சிகளையும் எடுக்க முடியாமல் மற்ற காட்சிகளையும் எடுக்க நேரமில்லாமல் ஷூட்டிஙை கேன்சல் செய்துவிட்டு ஸ்பாட்டிலிருந்து கிளம்பிவிட்டதாம் ஐ படக்குழு.

ஒரே நேரத்தில் பல படங்களை ஒப்புக்கொண்டதால் தான் சந்தானம் இப்படி அவதிப்படுகிறார். கூடிய சீக்கிரத்தில் “மாசத்துக்கு 31 நாள் தான், அதுல 40 நாள் நடிக்க சொன்னா எப்புடி முடியும்” என்ற காமெடி சந்தானம் நடிக்கும் படத்தில் வரும் என்பது ரசிகர்களின் கமெண்ட்.