Sunday, 26 August 2012
2வது மனைவி பிரிந்து சென்ற விவகாரத்தில் மச்சானை???
2வது மனைவி பிரிந்து சென்ற விவகாரத்தில் மச்சானை தாக்கிய மைத்துனரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை அடையாறு அருணாசலபுரம் வசந்தா பிரஸ் சாலையை சேர்ந்தவர் வீரநாராயணன் (55). பிரின்டிங் பிரஸ் நடத்துகிறார். இவர், முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு வில்லிவாக்கத்தை சேர்ந்த நந்தீஸ்வரி (39) என்பவரை 2வது திருமணம் செய்தார். இவர் மூலம் ஒரு குழந்தை உள்ளது. இந்நிலையில், கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கணவரை பிரிந்து சென்றார் நந்தீஸ்வரி. மேலும் இதுசம்பந்தமாக, தனது அண்ணன் சண்முகத்திடமும் நந்தீஸ்வரி கூறியுள்ளார். இதையடுத்து, சண்முகம் கடந்த 22ம் தேதி வீரநாராயணனை சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அடித்து கொண்டனர். வீர நாராயணன் பலத்த காயம் அடைந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இதுகுறித்த புகாரின்படி, சாஸ்திரி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, இன்று காலை சண்முகத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்
Labels:
sirakugal news