தேடல் தான் வாழ்வின் உயிரோட்டத்துக்கு காரணம். என்ன தேடுகிறோம் என்று தெரியாமலே எதையோ தேடிக் கொண்டு இருக்கிறோம். அறிஞர்கள் சொன்ன கருத்துக்களை வெறும் வார்த்தை ஜாலமாக எடுத்துக் கொண்டு மறக்கிறோம் ! ஆயிரம் திருக்குறளை மனப்பாடம் செய்தவனை விட, ஒரு குறளை படித்து அதன் படி வாழ்பவன் ஆயிரம் படி மேலானவன் !
இந்த பதிவில் வெற்றி பெற்ற ஒரு சிலரது ஆழக் கருத்துக்கள் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் !
- ஒரு காரியத்தில் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து செயல்படும் போது, அந்த நம்பிக்கை நிறைவேறும் வகையில் சந்தர்ப்பங்கள் உருவாகின்றன என்பதை உணர முடிகிறதா?
- அறிவு பூர்வமாக வாழ்பவர்களுக்கு வாழ்க்கை விநோதமாக இருக்கும்; உணர்ச்சி பூர்வமாக வாழ்பவர்களுக்கு அது சோகமாக இருக்கும்!
- நமக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு காரணம், இல்லை என்று சொல்லத் தைரியமில்லாததும், சரி என்று சொல்லத் தயங்குவதும் தான் !
- எதிரிக்கு பயந்து உங்கள் கதவுகளை மூடிக் கொண்டால், அது உங்கள் நண்பரது வருகையையும் தடுக்கும்.
- பிரச்சனையில் இருந்து தப்பிப்போவதற்கு எவ்வளவு சக்தி தேவையோ அதே அளவு சக்தி தான் பிரச்சினையைப் புரிந்து கொண்டு வெற்றி கொள்வதற்கும் தேவையாக இருக்கிறது ! எது மேல்?
- ஆற்றோடு எதிர் நீச்சல் போட்டால் முன்னேறுவது கடினம்.
- நின்று போன கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரம் காட்டும்!
மேற்கண்ட கருத்துக்கள் சூழ்நிலையை பொறுத்து பல உட் பொருட்கள் தருவதை நான் உணர்கிறேன் ! இந்தக் கருத்துக்கள் உங்களின் தேடலுக்கும் !