ஒரு மனிதனுக்கு எவ்வளவு குடுத்தாலும் அடங்காதது அல்லது தணியாதது என்று பார்த்தால் அது பணம், புகழ், பதவி, பட்டம் இப்படி சொல்லி கொண்டு போகலாம் ஆனாலும் இவை எல்லாவற்றையும் தாண்டி ஒருவர் நிதானமாக இருக்க முடியும் என்றால் அது ரஜினிக்கு மட்டுமே சாத்தியம்.
கேமரா மறைவிலும் ஒரு ஸ்டைல்..
தான் என்றதை கொஞ்சம் தள்ளி போட்டு நடக்கும் ஜாம்பவான்.. சினிமாவில் கவரும் சில நடிகர்கள் அதை தாண்டி கவருவது கொஞ்சம் குறைவு தான். ஆனாலும் தமிழ் சினிமாவின் ஒரு ராட்சச வசூல் மன்னனாகவும், எவ்வளவு பணம், புகழ் சேர்த்தும் தன்னை ஒரு சாதரணன் போல இயல்பிக்கிற சூப்பர் ஸ்டாருக்கு மட்டுமே அது சாத்தியம்.
ரஜினி ரஜினி தான்
சினிமா தவிர்த்து இவரது மேடை பேச்சுக்களுக்காகவே ஒரு கூட்டம் கூடும். (சினிமா தவிர்த்தே) அரசியல், எழுத்து என்று பல வகைகளில் அவரை பிரதிநிதித்துவ படுத்த நினைக்கிற கூட்டம் அதிகம்..
இதை வாசிப்பவர்களுக்கு இதே போல எங்கோ பார்த்த போல இருப்பதே அவரது
பெரிய வெற்றி.. காரணம் தேடி தேடி வார்த்தைகளால் விமர்சித்து விட்டாயிட்டு
இவரது மேடை பேச்சுகளிலே குட்டி கதைகள் பிரபலம்.
இன்று நாம் ரஜினி பற்றியே ஒரு குட்டி கதை பார்ப்போம்.
ரஜினி அன்று பயங்கர மகிழ்ச்சியாயிருந்தார். அவரது சிவாஜி படம் வெளியாகி உலகம் முழுக்க பிச்சு கொண்டு வசூல் கொட்டிய நேரம. சந்தோஷ
மிகுதியால் சாமி கும்பிட எண்ணி சிறு வயது முதல் தான் செல்லும் கோயிலுக்கு
சென்றார். இயற்கையான ரஜினியாக சென்றால் ஜனக்கூட்டம் பெருகி கோவில்
நிர்வாகம் பாதிகப்படும் என்று எண்ணியவர் நண்பனை கூட்டி கொண்டு பிச்சை கா
வேஷத்தில் சென்றார்.
நண்பன் "என்னடா இது? யாரும் பார்த்தல் கேவலம்" என்றார்.
அதற்கு ரஜினி சொன்ன பதில் "நான் நானாக சுதந்திரமாக இருப்பதினயினையே விரும்புகிறேன். யாரும் என்னை தங்க கூட்டுக்குள்
அடைத்து வைக்க முடியாது." என்றார்.
கோயிலுக்குள் சென்றனர்.
ரஜினியை பிச்சைகாரன் என்று எண்ணிய ஒரு மார்வாடி பெண், பத்து ரூபாய்
நோட்டினை எடுத்து தர்மம் குடுத்து சென்றார். அந்த அம்மாவை பின்
தொடர்ந்த ரஜினி உண்டியல் பேட்டியின் முன் நின்றார். 100 ரூபாய் நோட்டை
எடுத்து அதனுள் போட்டார்.
அதை பார்த்து அவள் அசந்து நின்றாள்.
கூர்ந்து பார்த்தார்.
அவள் ரஜினி ரசிகை.
வெட்கத்தோடு பிச்சைகாரன் பின் சென்றார்.
அவர் மகா விலை உயர்ந்த ஆடம்பரமான படகு காரில் ஏறினார். மார்வாடி
பெண் ஓடி சென்று "பிச்சை கார பிரபுவே என்னை மன்னியுங்கள், அந்த பிச்சை காசை தந்து விடுங்கள்.. " என்று கேட்டார்.
ரஜினி அதற்கு சொன்ன பதில் ஒரு தத்துவம்
"அம்மா தாயே, ஒவொரு முறையும் எதாவது முறையில் நான் பிச்சை
காரன் என்பதை என் ஆண்டவன் உணர்த்தி வருகிறான். அவனுடைய நாடகத்தில் நீங்களும் ஒரு கருவி தான்" என்று சொல்லி பத்து ரூபாயை ஒரு பொக்கிஷம் போல பத்திரமாக பைக்குள்
வைத்து கொண்டார்.