விவசாயி ஒருவன், தனது இரு எருதுகளைக் கொண்டு, தன்னுடைய வயலை உழுதால் நல்ல விளைச்சல் காணலாம். களர் நிலத்தை உழுதால் அவன் என்ன காண்பான்?.
இடகலை, பிங்கலை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளை ஒழுங்காக பாவித்தால் , மூலாதாரம் எனும் வயல், பேரின்பமாகிய விளைச்சலைத் தரும். களர் நிலமாகிய, சிற்றின்ப நாட்டத்திலே தனது வாழ்க்கையை ஓட்டுபவன், தனது உயிர் சக்தியை இழந்து அற்ப வயதிலே வாழ்க்கையை இழப்பான்.
அன்றைய நாளில், ஏற்றம் இறைத்து பயிரிடுவார்கள் . வாய்க்கால் வழியே செல்லும் நீர் வாய்க்காலிர்க்கு பாய்ந்தால் லாபம். வாய்க்கால் நீர் வயலுக்கு பாயாமல் வெளியேறி போனால், யாருக்கு என்ன லாபம். விலைமகள் ஒரு கோழி குஞ்சு வளர்த்தாள். காமுகன், தன்னை நாடி வரும்போது, காமுகனுக்கு தன்னை விருந்தாக்குவதோடு, தன் கோழியையும் விருந்தாக்குவாளாம். இதனை திருமூலர் கூறுகிறார்....
ஏத்தம் இரண்டுல ஏழுதுலா உள
மூத்தான் இறைக்க இளையோன் மடுத்தநீர்
பாத்தியுள் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடின்
கூத்தி வளர்த்ததோர் கோழிப் புள்ளாமே!
இடகலை பிங்கலை இந்த இரண்டு மூச்சுக் காற்றும், ஏழு தாதுக்களால் இயங்குகின்றன. அவை இரண்டும் வட, இடமாக இயங்கினால் நன்மை. இரண்டும் தனித் தனியே இயங்கினால், உயிராற்றல் வெளியே பாய்ந்து வீணாகி விடும். ஒன்றாக இயங்கும்போது உயிர் ஆற்றல் மேல் நோக்கி சென்று உடலாகிய வயல் பயன்பெறுகிறது. தனித் தனியாக இயங்கும்போது, தவறான சிந்தனையின் காரணமாக, விலைமகள் விலைமகள் வளர்த்த கோழி இரண்டும் காமுகனுக்கு விருந்துக்கு ஆளாவது போல், வீணாகிறது .