Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 17 December 2011

தாதாவாகிறார் சிம்பு

இப்போதெல்லாம் எல்லா முன்னணி நடிகர்களோடு கூட்டணி போட ஆரம்பித்துவிட்டார்கள். அந்த ஒஸ்தியான கூட்டணிகளில் ஒன்று வெற்றிமாறன்-சிம்பு கூட்டணி. படத்துக்கு 'வடசென்னை' என்று பெயர் வைத்ததுமே, மீடியாக்களில் ஆளாளுக்கு தாதா கதை என்று எழுத ஆர்ம்பித்துவிட்டார்கள்.

பாக்சர் வடிவேலுவைக் கொன்றவர்களைப் பழி வாங்கிய அவரது மச்சானின் கதை. பாக்சரின் மச்சானாகத்தான் சிம்பு நடிக்கிறார் என்று ஒரு குரூப் வெற்றிமாறனுக்கு கதையே தந்தது.

"என்னோட படத்தின் கதை இதுதான் என்று வந்த கதைகளையெல்லாம் படித்து மனம் விட்டு சிரிப்பதைத் தவிர நான் வேறென்ன செய்ய முடியும். ஒரு அவுட்லைனாக சிம்புவுக்கு பத்து வரியில் கதை சொல்லியிருக்கிறேனே தவிர, என் படத்தின் முழுக்கதை எனக்கே தெரியாது" என்று சிரிக்கிறார் வெற்றி.

நல்லாத்தான் கிளப்புறாங்கய்யா பீதிய...