Saturday, 17 December 2011
ஒரு இயக்குனராக கே.வி.ஆனந்த்
ஒரு இயக்குனராக, கே.வி.ஆனந்த் தொடர்ந்து வெற்றிகளைக்குவித்து வருவதை ஒட்டி, சுமார் அரைடஜன் ஒளிப்பதிவாளகள் இயக்குனரகும் எண்ணத்தில் கதை சொல்ல அலைந்துகொண்டிருக்கிறார்கள். இந்த பட்டியலில் இப்போது தன்னையும் இணைத்துக்கொண்டிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராம்ஜி. தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மயக்கம் என்ன ராம்ஜியை இன்னும் உயரத்துக்கு கொண்டுசென்றிருக்கிறது. இதுவரை 7 இந்திப்படங்கள் உட்பட 16 படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருக்கும் ராம்ஜிக்கு இயக்குனர் ஆசையைத் தூண்டிவிட்டவர் செல்வராகவன்� தானாம். உங்க டேலண்ட் எனக்கு தெரியும். ஒரு நல்ல கதை ரெடி பண்ணுங்க, அதை தனுஷ் கிட்ட சொல்லி ஓகே பண்ணுங்க, நானே புரடியூஸ் பண்றேன் என்று உற்சாகமூட்டுகிறாராம் செல்வா. ஹீரோ ரெடி, புரடியூஸர் ரெடி, அப்புறம் வேற என்ன வேணும் வாங்க ராம்ஜி ,வாங்க.