Saturday, 24 December 2011
திருநள்ளாறில் பெயர்ச்சி சனிப்பெயர்ச்சி விழா நடந்தது
திருநள்ளாறில் பெயர்ச்சி சனிப் முடிந்து முதல், சனிக்கிழமையான இன்று ஒரே நாளில், மூன்றரை லட்சம் பக்தர்கள் சனி பகவானை தரிசனம் செய்தனர். காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், கடந்த 21ம் தேதி, சனிப் பெயர்ச்சி விழா நடந்தது. அன்று மட்டும், ஐந்து லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். அதை தொடர்ந்து வந்த, முதல் சனிக்கிழமையான இன்று, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காலை 3 மணிக்கே நடை திறக்கப்பட்டதால், அதிகாலையில் இருந்தே பக்தர்கள் கோவிலுக்கு வர துவங்கினர். சுற்றுலா வாகனங்கள் அனைத்தும், திருநள்ளாறு எல்லையிலேயே நிறுத்தப்பட்டன. சனிக்கிழமையையொட்டி சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடத்தப்பட்டன. இன்று மட்டும், மூன்றரை லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.