Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday, 15 November 2011

எங்கள் காவல் நிலையத்திற்கு விடிவு எப்போது: தவிக்கிறது வாசுதேவநல்லுர் நகரம்

பொது மக்கள் தங்களின் பிரச்சினைகளையும் விவகாரங்களையும் நிவர்த்தி செய்துகொள்ள நாடும் இடம் காவல் நிலையம்.

தற்போது அந்தக் காவல் நிலையமே அபாயத்தில் உள்ளது.

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லுர் நகர காவல் நிலையம் 40 ஆண்டுகஞக்கு முன்பு கட்டப்பட்டது. சில ஆண்டுகஞக்கு முன்பு அதன் கைதிகள் அறையும், இன்ஸ்பெக்டர் அறையின் மேற் கூரைகளும் இடிந்து விழுந்தது. தற்காலிகமாக அவைகள் பழுது பார்க்கப்பட்டாலும் போதிய பாதுகாப்பு இல்லை.


மேலும் புதிய காவல் நிலையம் கட்டுவதற்கு 60 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டும். இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் காவல் நிலையத்தின் முன்புறம் உள்ள சிமெண்ட் கட்டிடம் இடிந்து விழும் நிலையிலிருப்பதால் போலீசார் அங்கு கயிற்றைத்கட்டி தடுத்துவிட்டனர்.

தற்போது அந்த வழியின் ஒரமாகவே காவல் நிலையம் சென்று அச்சத்தில் பணிகளை மேற் கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் காவலர்கள்.

இதே ஆபத்து புகார் தரச்செல்லும் பொதுமக்களையும் வாட்டுகிறது. எங்கள் காவல் நிலையத்திற்கு விடிவு எப்போது என தவிக்கிறது வாசுதேவநல்லுர் நகரம்.