Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 12 November 2011

கோல்கட்டாவில் இந்திய வீரர்கள்!


கோல்கட்டா: இரண்டாவது டெஸ்டில் பங்கேற்பதற்காக, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நேற்று கோல்கட்டா வந்தனர்.
இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. டில்லியில் நடந்த முதல் டெஸ்டில், ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட், வரும் 14ம் தேதி கோல்கட்டாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் துவங்குகிறது.
சச்சின் வரவில்லை:
இதற்காக இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நேற்று கோல்கட்டா வந்தனர். இரு அணி வீரர்களும், விமானநிலையத்தில் இருந்து பாதுகாப்பாக ஓட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்திய அணியினரோடு "மாஸ்டர் பேட்ஸ்மேன்' சச்சின் நேற்று வரவில்லை. சர்வதேச கிரிக்கெட் அரங்கில், தனது 100வது சதத்தை எதிர்நோக்கி உள்ள இவர், இன்று சகவீரர்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல, நாளை சென்னையில் நடக்கவுள்ள தனது திருமண நிகழ்ச்சி காரணமாக இளம் இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் வரவில்லை. இவர், திருமண நிகழ்ச்சிக்குப் பின் இந்திய அணியினரோடு இணையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.