அவ்வளவு துக்கத்திலும் மின்னலடித்த மாதிரி ஒரு சந்தோஷம் என்று நினைக்கிறார்கள் ஒரு சந்திப்பை. கடந்த சில தினங்களுக்கு முன்பு இசைஞானி இளையராஜாவின் மனைவி ஜீவா காலமானார். இந்த துக்க சம்பவத்தின் போது ஒரு படத்தின் இசைப்பணிக்காக ஐதராபாத் சென்றிருந்தார் அவர். மிகுந்த துக்கத்தோடு சென்னை திரும்பியவர், யாரையும் அழக் கூடாது என்று கூறியதுடன் தானும் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தார்.
அந்த நேரத்தில்தான் பல வருடங்களாக பிரிந்திருந்த கவிப்பேரரசு வைரமுத்து அங்கு வந்தார். எங்காவது விழாக்களில் சந்தித்தால் கூட நேருக்கு நேர் பார்ப்பதையே தவிர்க்கும் வழக்கம் கொண்டவர்கள் இருவரும். ஆனால் இந்த முறை இளையராஜாவின் அருகில் சென்ற வைரமுத்து, அவரது கைகளை இறுக்கமாக பற்றி தனது கவலையை மவுனமாக வெளிப்படுத்தினார். அதன்பின்பும் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றாலும், இந்த சந்திப்பை கவனிக்க தவறவில்லை அங்கிருந்தவர்கள்.
Labels:வைரமுத்து-இளையராஜா