Saturday, 12 November 2011
டி.வி தொடரில் நடிப்பது ஏன்?
சன் டி.வி.யில் ஒளிபரப்பாகும் ‘நாகம்மா’ தொடரில் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் சாயாசிங். இதுபற்றி அவர் கூறியதாவது: தொலைக்காட்சி தொடரில் நடிப்பது சினிமா வாய்ப்பு குறைந்ததால் அல்ல. எந்த வேடத்தில் வேண்டுமானாலும் நடிக்க தயார் என்றால் இப்போது பல படங்களில் நடித்துக் கொண்டிருப்பேன். நான் எதிர்பார்ப்பது மாதிரியான கேரக்டர் அமையாததால் நடிக்கவில்லை. எதிர்பார்த்த கேரக்டர் தொலைக்காட்சி தொடரில் அமைந்தது, நடிக்கிறேன். நடிப்பு என்று வந்துவிட்ட பிறகு சின்னத்திரை, பெரிய திரை வித்தியாசமெல்லாம் பார்க்கக் கூடாது. இந்தியில் முன்னணியில் உள்ள பல நடிகர், நடிகைகள் சின்னத்திரையில் இருந்து வந்தவர்கள். தமிழில் சின்னத்திரையில் வெற்றி பெற்றவர்கள் பெரிய திரை நடிகைகள். சின்னத்திரையில் நடித்தாலும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.