பஸ் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இதில் காலை முதல் உண்ணாவிரதம் இருந்த விஜயகாந்த் மாலையில் பேசுகையில்,
எங்கப் பார்த்தாலும் கொள்ளை. கொள்ளை. எங்கள் பார்த்தாலும் ஊழல், ஊழல். முடிந்த அளவுக்கு போராடுவேன். தப்பு என்றால் தப்பு. எங்களால் தான் ஜெயித்தோம் என்று சொன்னீர்கள். ஒரு வருஷத்துக்கு முன்னாடி மின்னணு ஓட்டு வேண்டாம் என்று சொன்னீர்கள். இப்ப ஒரு ஓட்டு முரசில் போட்டால், பத்து ஓட்டு இலைக்கு போகுது. அது சொன்னால் ஒத்துக்குவாங்களா. நாங்கள் வரலை. ஜெயித்தா ஜெயிச்சுக்கோ. தோல்வின்னா தோல்வி.
ஆவின் பாலை விட தனியார் பால் அதிகமாக விற்பனையாகிறது. ஆவினில் பாலை கொடுத்தால் லேட்டாக காசு வருகிறது. தனியாரில் பாலை கொடுத்தால் உடனே காசு வருகிறது. அதனால் தான் ஆவினில் கொள்முதல் குறையுது. தனியாரில் கொள்முதல் அதிகமாகிறது. தலைமையில் இருந்து, அதிகாரிகள் வரை எல்லாம் கை நீட்டுறாங்க.
பால் விலையை உயர்த்திவிட்டு, அப்படியே அசோக வன சீதை மாதிரி பேசுகிறார். என்னை வாழவைக்கும் தாய்க்குலங்களே என்று சொல்லுகிறீர்களே, அந்த தாய்குலத்துக்குத்தான் பால் விலை ஏற்றமா? இல்லை பஸ் கட்டண ஏற்றமா?
ஓபிஎஸ், செங்கோட்டையனும் அம்மா அம்மா என்று சொல்லுவாங்க. என்னால அப்படி சொல்ல முடியாது. என்னால கையை கட்டி வாயைப் பொத்தி உட்கார முடியாது. சட்டசபையில் ஒருத்தர் எழுந்து நின்று அந்த அம்மாவைப் பார்த்தவுடன் உட்கார்ந்துவிடுவார். தரையில் விழுந்து கும்பிடுகிறார்கள். எல்லாம் ஒரு ஐந்து வருஷம் தான். இதுக்கு முன்னாடி எப்படி இருந்தாங்க. எனக்கு எல்லாம் தெரியும்.
எல்லாம் அரசியல்ல சகஜம். உண்மையில் சொல்லப்போனால் அண்ணன் கவுண்டமனி சொல்வதைப்போல அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா. இவ்வளவு கேவலமாக அரசியல் நடந்துக்கொண்டிருக்கு என்றார்.