பஞ்சாப்பில் நடைபெற்றுவந்த உலகக் கோப்பை கபடிப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது.
லீக் சுற்றில் இந்தியாவிடம் மட்டுமே தோற்றிருந்த கனடா அணியும், லீக் சுற்றில் தோல்வியே அடையாத இந்திய அணியும் இறுதிப் போட்டியில் மோதின. இந்தப் போட்டியில் இந்தியா கனடாவை 59-25 என்ற கணக்கில் வென்றது.
மேலும், மகளிர் கபடிப் போட்டியிலும் இந்தியா உலக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த அணி, இங்கிலாந்தை 44 - 17 புள்ளிக் கணக்கில் வென்றது.
மூன்றாவது இடத்துக்கு நடைபெற்ற ஆண்கள் கபடிப் போட்டியில் பாகிஸ்தான் இத்தாலியை 60-22 புள்ளிக் கணக்கில் வென்றது.