Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Friday, 25 November 2011

இந்திப்படம் எப்போது? -தனுஷ்

தனுஷ் விரைவில் ஒரு படத்தை இயக்கப் போவதாக முன்பே அறிவித்துவிட்டார். ஆனால் இவரது முதல் படம் தமிழில் இல்லை என்பதுதான் ஆச்சர்யம். தனக்கு பரிச்சயமே இல்லாத இந்தியில்தான் இந்த படத்தை இயக்கப் போகிறாராம். இதற்கான முறையான அறிவிப்பை பிப்ரவரி மாதத்தில் வெளியிடும் முடிவிலிருக்கிறார் அவர். அதற்குள் முழுமையாக இந்தி கற்றுக் கொள்ளும் வேலைகளிலும் தீவிரமாக இருக்கிறார் தனுஷ். இதுவரைக்கும் பதினொரு குறும்படங்களை இயக்கியிருக்கிறாராம் இவர். படப்பிடிப்பின் இடையிலேயே இந்த குறும்படங்களை எடுத்த தனுஷ், அவற்றையெல்லாம் தனது மானசீக குருவான பாலுமகேந்திராவிடம் காட்டி ஆலோசனை பெற்றுக் கொள்வாராம். இவரது இன்னொரு குருநாதர் அண்ணன் செல்வராகவன்தானே? அவரிடமும் காட்டி கருத்துக்களை கேட்டுக் கொள்வாராம். அந்த அனுபவங்கள்தான் இப்போது படம் இயக்குகிற அளவுக்கு தைரியத்தை வரவழைத்திருக்கிறது.