Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Saturday, 12 November 2011

சகுனி 11.11.11-ல் தொடங்கியது


சகுனி படத்தை தொடர்ந்து கார்த்தி அடுத்து நடிகை அனுஷ்காவோடு நடிக்க இருக்கும் புதிய படத்தின் சூட்டிங் நேற்று (11.11.11-ல்) தொடங்கியது. தலைநகரம் படத்தை டைரக்ட் செய்த சுராஜ் அடுத்து கார்த்தியை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் பருத்திவீரன், சிறுத்தை உள்ளிட்ட படங்களை தயாரித்த ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் கார்த்தி ஜோடியாக நடிகை அனுஷ்கா நடிக்கிறார். கூடவே சிறுத்தை படத்தில் ஆரம்பித்த கார்த்தி-சந்தானம் கூட்டணி, இந்தபடத்திலும் தொடர்கிறது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க, சரவணன் ஒளிப்பதிவு செய்ய, பிரபாகர் ஆர்ட் டைரக்டராக பணியாற்றுகிறார். மீடியாவில் பரபரப்பாக பேசப்பட்ட இந்தப் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று 11-11-11அன்று தொடங்கியது. சாலக்குடியில் தொடர்ந்து 20நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது.

Labels: கார்த்தி, அனுஷ்கா, சுராஜ்,