Get Paid To Promote, Get Paid To Popup, Get Paid Display Banner

Tuesday 18 September 2012

மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க

பெண்களுக்கு மாதவிலக்கு பிரச்னைகள் வராமல் தடுக்க என்னென்ன சாப்பிடலாம் என்று உணவு ஆலோசகர் தரும் குறிப்புகள் இதோ....குண்டாக இருப்பது, தொடரும் ரத்த சோகை, அடுத்தடுத்து பிரசவம், சத்தில்லா உணவு உட்கொள்வது என பல காரணங்களால் பெண்களுக்கு மாதவிலக்கு சமயத்தில் தொல்லைகள் ஏற்படுகிறது.

ஹார்மோன் சுரப்பியில் ஏற்படும் மாற்றங்களால் முறையற்ற மாதவிலக்கு, அதிக ரத்தப்போக்கு, சோர்வு ஏற்படும். இதுபோல் பிரச்னை உள்ளவர்களுக்கு எடை குறைந்த குழந்தைகள் பிறக்க வாய்ப்புள்ளது. சிறு வயது முதல் சத்துள்ள உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சி, புரதம் மற்றும் இரும்புச் சத்து, அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

முருங்கைக் கீரை, ராகி, முளைகட்டிய பயறு வகைகள், முழு கோதுமை, பச்சைக் காய்கறிகள், பழங்கள், பாதாம், முந்திரி, உலர் திராட்சை, ஆட்டு ஈரல், மீன், முட்டை ஆகிவற்றை தினமும் உணவில் சேர்க்க வேண்டும். பேரீச்சை, மாதுளை, கொள்ளு, அவல், பெரிய நெல்லி, பனை வெல்லம் ஆகியவற்றையும் அடிக்கடி உணவில் சேர்த்தால், மாதவிலக்கு பிரச்னையை ஓரளவு தடுக்க முடியும்.